![]() |
Corona News |
தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 64,603 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,148 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட்ட 2,516 பேரில் 1,557 பேர் ஆண்கள், 959 பேர் பெண்கள் ஆவர்.
ஒட்டுமொத்த பாதிப்பில் 39,897 பேர் ஆண்கள், 24,686 பேர் பெண்கள், 20பேர் திருநங்கைகள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது. பலியான 39 பேரில் 11 பேர் தனியார் மற்றும் 28 பேர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்தவர்கள்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக 46 அரசு மற்றும் 41 தனியார் என மொத்தம் 87 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்று சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment