தமிழர் யார்?
கன்னியாகுமரிக்குத் தெற்கே பரவியிருந்த லெமூரியா கண்டத்திலிருந்து வந்தவர் என்பர் ஒரு சாரார்.
அந்த நிலப்பரப்பை ”நாவலந்தீவு” எனப் பெயரிட்டு அழைத்தனர்.
கால்டுவெல் முதலானோர் தமிழர்களின் முன்னோர் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கலாம் என்பர்.
கங்கைச் சமவெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்கிறார் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி.
புலுசிஸ்தான் பாகங்களில் இன்றும் திராவிட மொழிகளும் புருஹீ மொழிக்கும் தொடர்புண்டு என்கிறார் ராப்ஸன்.
எனினும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட யாவரும் தமிழர் எனலாம்.
இதற்கு விடை புரட்சி கவி கூறும் பதிலை காண்போம்
"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்,
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்."
-பாரதிதாசன்
இதற்கு பொருள் இன்றைய கட்சித் தலைவர் சொல்வதுபோல் பிறப்பின் அடிப்படையில் இல்லை.
தமிழ் பற்றின் அடிப்படையில்... தமிழ் பற்று உள்ள ஒருவன் எங்கு இருந்தாலும் அவன் தமிழனே. பிறப்பால் தமிழராய் இருந்தாலும், வேற்று மொழிபித்துகொண்டு இருந்தால் அவர் தமிழரே இல்லை என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment