தமிழகம்:-
லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊர்மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய - சீன எல்லைப் பகுதியாக லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தினங்களுக்கு முன்பு இரு நாட்டு ராணுவ வீரர்களும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் தழுவியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் அடங்குவார்.
இவரது மரணச் செய்தி கேட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் மூழ்கினர். பழனியின் குடும்பத்தினர் ஈடு செய்ய முடியாத இழப்பால் தவித்தனர்.
No comments:
Post a Comment