Breaking

Post Top Ad

Your Ad Spot

CM Star Dreams - Youtube

Friday, June 19, 2020

ஐ.நா உறுப்பினராக இந்தியா தேர்வு (UNSC INDIA Membership)

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வு


ஐக்கிய நாடுகள் சபையின் வலிமை மிகுந்த பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினர் நாடுகளுக்கு நடந்த தேர்தலில் இந்தியா 193 வாக்குகளில் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
   
ஐக்கிய நாடுகள் சபை

      இதன் மூலம் சக்திவாய்ந்த பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் 10 நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
            ஆசிய-பிசிபிக் பிரிவில் நடந்த தேர்தலில்தான் இந்தியாவுக்கான இடம் கிடைத்துள்ளது. ஆசிய பசிபிக் பிரிவில் 55 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் இந்தியாவுக்கு அமோக ஆதரவு கிடைத்ததால் இந்தியா வென்றது


              ஏற்கெனவே ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினராக கடந்த 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 ஆண்டுகளில் இந்தியா வென்றிருந்தது. சமீபத்தில் 2011-12 ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடியின் ஆட்சியில் மீண்டும் இந்தியா இடம் பெற்றுள்ளது.


            இந்த வெற்றி குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், “பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றுள்ளதால், உலகத்தை வாசுதேவ குடும்பம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கொண்டுவர முயற்சிக்கும்.

         ஐ.நா.வில் இந்தியாவின் பயணம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. ஐ.நாவின் அடிப்படை உறுப்பினராக இந்தியா இருக்கிறது. ஐ.நா.வின் இலக்குகளை அடைவதற்கும், செயல்படுத்துவதற்கும், திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்தியா பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துள்ளது” எனத் தெரிவித்தார்

          

1 comment:

Post Top Ad

Your Ad Spot