சீமானை இயக்குவது
யார்..?
பதில்: -
கோடாரிக்கு பயந்த மரங்கள் அவரை இயக்குகிறது..
வெடி குண்டுகளுக்கு அதிர்ந்த மலைகள் அவரை இயக்குகிறது.
கடலில் வீணாய் கலக்கும் மழை நீர் அவரை இயக்குகிறது..
கதிரியக்கங்களுக்கு இறந்த சிட்டுகுருவிகளும், பறவைகளும் அவரை இயக்குகிறது..
வாழ்விடங்களை இழந்த விலங்குகள் அவரை இயக்குகிறது..
![]() |
சீமான் |
சாக துடிக்கும் மொழியும், பண்பாடும், அவரை இயக்குகிறது..
படுகொலை செய்யப்பட்ட _ஈழ மக்களின்_ அழுகுரல்கள் அவரை இயக்குது..
சாதி, மதம் எனும் தீய நெருப்பினால் பொசுங்கிய சமத்துவம் அவரை இயக்குகிறது..
கல்வி வியாபாரம் ஆக்கியதால் உயர்ந்த படிப்பை படிக்காத ஏழை குழந்தைகளின் கனவுகள் அவரை இயக்குகிறது....
காசில்லாமல் உயர் வைத்தியம் பார்க்காமல் இறந்தவர்கள் அவரை இயக்குகிறார்கள்..
*தூக்கில் தொங்கிய விவசாயி*,
மன அழுத்தத்தில் இறந்த காவலர்கள்,
படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் தற்கொலை செய்த அனைவரின் கனவுகளும் அவரை இயக்குகிறது..
ஆக, நீங்கள் அவரை இசுலாமிய, கிருத்துவ மிசினரிகள், ஆர்.எஸ்.எஸ், அதிமுக, திமுக இயக்குவதாக நினைத்து கொள்ளுங்கள்.
என்னை பொறுத்தவரை தமிழ்த்தேசியம் எனும் மாற்று புதிய அரசியலை படைக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் உயிர்த்துடிப்பும் அவரை இயக்குவதாக தான் நான் நினைக்கிறேன்...
*நாம் தமிழர் கட்சி*
No comments:
Post a Comment