காவலர்களால் காவல் துறை
சில காவலர்களால் காவல் துறையின்
நல்ல மதிப்பும், மரியாதையும் மக்கள் இடையே மிகுந்த கேள்விக்குறி ஆகிறது..
எத்தனையோ மிக சிறந்த காவலர்கள் இருக்கும் காவல் துறையில் தான் சாத்தான் குளம் சம்பவம் நிகழ்த்திய காவலர் , தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்த்திய காவலர்கள் போன்ற மோசமான காவலர்களும் இருக்கின்றனர்..
இதற்கு என்ன காரணம்..?
* அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்
*கட்டுப்பாடுகள் அற்ற காவல் துறையின் சுதந்திரம்
*சில அதிகாரிகளுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு
* காவலர்கள் தவறு செய்தால் அதை விசாரிக்கவும், தண்டனை வழங்கவும் சரியான தனித்துவ அமைப்பு ஒன்று இல்லை.
இவற்றுக்கான ஒட்டுமொத்த காரணம் சரியான அரசியல் அமையவில்லை என்பதே உண்மை.
அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசியல் தான் காரணம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் காலையில் எழுந்தது முதல் இரவு
உறங்கும் வரை செய்யும் அனைத்து செயல்களிலும் அரசியல் உள்ளது இதை உணர்வது அவசியம்
No comments:
Post a Comment