தமிழன் அறிவியல்
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி"
-மூதுரைப் பாடல் - ஒளவையார்
பொருள்.
கடல் நீரை எவ்வளவு அழுத்தி முகர்ந்தாலும் ஒரு படியானது (நாழி) நான்கு படி (நால்நாழி) நீரை மொள்ளாது (திரவத்தை அழுத்த முடியாது)
திரவங்களை அழுத்த முடியாது என பின்னர்தான் பிளாசி பாஸ்கல்
17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கணித மேதையும் இயற்பியல் அறிஞர் விளக்கினார்
வானியல் அண்டவியல் அறிவு இருந்தமைக்கான பல சான்றுகள் கிடைக்கின்றன.
"அண்டப்பெருவெளியில் உருண்டைப் பெருக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெறும் காட்சி" - திருநாவுக்கரசர்
அண்டம் என்ற பெருவெளியில் உருண்டையான கோள்களின் காட்சி அளவிட முடியாத வளமான காட்சியாக விளங்குகிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
தொல்காப்பியர் - ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் எனப் பாகுபாடு செய்திருப்பது இன்றைய தாவரவியல் சிந்தனைகளுக்கு முன்னோடியாக அமைந்துள்ளன.
ஓரறிவுயிர் - தொடுதல் உணர்வுடையவை தொட்டாச்சிணுங்கி, புல் போன்றன
ஈரறிவுயிர் - தொடுதல் உணர்வுடன் நாவினால் சுவைத்தல் உடையவை. கிளிஞ்சல்கள், சங்கு, நத்தை, சிப்பி, போன்றன.
மூவறிவுயிர் - மூன்றாவது அறிவுடையவை தொடுதல் நாவினால் உண்டாகும் சுவையுடன், மூக்கினால் முகர்தல் இவை செல், ஈசல், பட்டுப்பூச்சி, போன்றன.
நாலறிவுயிர் - தொடுதல், நாவின்சுவை, மூக்கால் உணர்தல் கண்ணால் காணுதல். வண்டு, குளவி போன்றன.
ஐந்தறிவுயிர் - மேலே கூறிய நான்கு உணர்வுடன் செவிஉணர்வு சேருவது இவை விலங்குகள் பறவைகள், மீன், முதலை, ஆமை போன்றவை.
ஆறறிவுயிர் - இந்த ஐந்தும் சேர்ந்து மனம் என ஒன்றுபட்டு சிந்திக்கின்ற அறிவு பெற்றவர். மாந்தர் என தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார்
மேலும் தாவரங்களை வகைப்படுத்தும் போது வயிரம் பாய்ந்த வன்மையான தாவரங்கள், வயிரம் பாயாத வன்மையான தாவரங்கள் என வகைப்படுத்துகின்றார்.
மூங்கில், வாழை, தென்னை, பப்பாளி, ஈச்சம் போன்ற மரங்கள் வேர்கள் அதிகம் பரவாமல் உள்வெளி வெற்றிடமாக இருக்கும் என்பதை விளக்குகின்றார்.
வேம்பு, மா, பலா, அரசு, ஆல் போன்ற மரங்கள் உள்ளே வயிரம் பாய்ந்த மரங்கள் எனப்பிரிக்கிறார்.
இதையே அகக்கால் புறக்கால் என விளக்குவது பழந்தமிழரின் அறிவியல் அறிவினைச் செப்புகிறது. மேலும் ஊர்வன, பறப்பன, ஆண்பால் பெயர் பெறும் விலங்குகள், பெண்பால் பெயர் பெறும் விலங்குகள் என விளக்குவது அறிவியல் திறன் சார்ந்ததாக அமைகின்றது.
பழந்தமிழரின் மருத்துவவியல் வியக்கத்தக்க ஒன்றாக இன்றும் அறியப்படுகிறது. இன்றைய அறுவைசிகிச்சைக்கான குறிப்பு அன்றே குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது. மேலும் தமிழர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என வாழ்ந்தார்கள்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் சக்கரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்களை வளைந்த குயவனின் சிறப்பை
"கலங்களை உருவாக்குகின்ற குயவனே" என புறநானூற்றில் ஒரு மன்னனை அடக்கம் செய்யும் தாழியினை அளவு தொடர்பான செய்தி கூறப்பட்டுள்ளது.
தச்சுத்தொழிலும், மட்பாண்டத்தொழிலும் தமிழரிடையே சிறந்திருந்தது. கட்டிடவியல், சிற்பக்கலை போன்றவற்றில் தமிழரின் அறிவியல் கூறுகளை காணலாம்.
No comments:
Post a Comment